spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- மூன்று பேர் பலி

திருச்சியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- மூன்று பேர் பலி

-

- Advertisement -

திருச்சியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- மூன்று பேர் பலி

திருச்சி மாத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - மூன்று பேர் உயிரிழப்பு

சேலத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே போல காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கி மற்றொரு காரும் வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு கார்களும் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே வந்த போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் புதுக்கோட்டை நோக்கி சென்ற காரில் பயணித்த
மகிஷா ஸ்ரீ (12),சுமதி (45), கார் ஓட்டுனர் கதிர் (47) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு கார்களிலும் வந்த 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

we-r-hiring

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் 3 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்தால் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

MUST READ