சுதந்திரத்திற்கு பிறகு குதிரைகள் மூலம் 500 ஆண்டுகள் பழமையான கிராமத்திற்கு வீடு தேடி சென்ற ரேஷன் பொருட்கள் விநியோகம். வீடு தேடி வரும் ரேஷன் பொருட்களால் ரூ.1000 வரை மிச்சம் என மக்கள் மகிழ்ச்சி. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகரமான கொடைக்கானல் உலக அளவில் பெரிய சுற்றுலாத் தலமாகும். மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக இருப்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம். கொடைக்கானல் நகர் பகுதிகளில் சுற்றுலாவே பிரதானமாக இருக்கக்கூடிய நிலையில் கொடைக்கானலை சுற்றி பல வரலாற்று சுவடுகளும் இருந்துள்ளது .
அதில் ஒன்றுதான் கொடைக்கானலில் கடைக்கோடி கிராமமாக இருக்கக்கூடியது தான் வெள்ளகெவி என்ற கிராமம். கொடைக்கானலில் இருந்து வட்டகானல் வழியாக சுமார் 7 கிலோமீட்டர் வரை இருபுறங்களிலும் உள்ள மலை சரிவுகளுக்கு நடுவே ஏழு கிலோமீட்டர் திக் ..திக் …
நடைபயணமாக செல்லக்கூடியது தான் வெள்ள கெவி என்ற கிராமம் … வெள்ளகெவி கிராமத்திற்கு தனியான சிறப்புகள் பலவும் இருக்கின்றன முதன் முதலில் கொடைக்கானலுக்கு வந்தவர்கள் வெள்ள கெவி என்ற கிராமம் வழியாகத்தான் வந்ததாக கூறப்படுகிறது . சுமார் 500ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமம் உருவானதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மிகவும் பழமையான கிராமமாக இருந்தாலும்
வெள்ள கெவி கிராமம் பல ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மக்கள் போல் தான் வாழ்ந்து வருகின்றனர். சாலை வசதியே இல்லாத இந்த கிராமத்திற்கு அடிப்படை தேவைகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து குதிரைகள் மூலம் கொடைக்கானலுக்கோ அல்லது அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய பெரியகுலத்திற்கோ தான் செல்ல முடியும் அவசர காலங்களில் மக்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட டோலி கட்டி தான் அவர்களை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவார்கள்.
இது போன்ற மக்களுக்கு ரேஷன் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்து வரக்கூடிய நிலையில் தங்களுடைய ரேஷன் பொருட்களை இதுவரை கேம்ப் ரேஷன்(camp ration shop) கடையான வட்டகானல் கடைக்கு வந்து தான் தங்களுடைய குடிமை பொருட்களான அரசி, பருப்பு , கோதுமை உள்ளிட்டவைகளை வாங்கி வட்டக்கானலில் இருந்து குதிரைகள் மூலம் கட்டியும் , தலை சுமையாகவும் சுமார் 7 கிலோமீட்டர் நடை பயண நேரம் 2 மணி நேரத்தை நடந்தே தங்களுடைய கிராமத்திற்கு சென்று வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைப்பதில் ஒரு விடிவு காலமே பிறந்துள்ளதாக கூறுகின்றனர்.
வெள்ள கெவி மக்கள். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் மற்றும் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி வீடு தேடி கல்வி , வீடு தேடி மருத்துவம் என்ற முறையில் தற்போது வீடு தேடி ரேஷன் பொருளும் கொடுக்க ஆரம்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் .மேலும் வட்ட கானலில் இருந்து குதிரைகள் மூலம் கொண்டு சென்றாலும் இலவசமாக கொடுக்கப்படக்கூடிய அரிசியை கூட தாங்கள் கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்வதாக கிராம மக்கள் வேதனை அடைந்த நிலையில் தற்போது அந்த ஆயிரம் ரூபாயும் எங்களுக்கு மிச்சம் என்று பெருமைப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமாரின் அறிவுறுத்தலின்படி உடனடியாக நேற்று கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லதுரை மற்றும் துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமையில் குடிமை பொருள் விநியோக அதிகாரிகள் அரிசி , பருப்பு, சர்க்கரை நிலக்கடலை உள்ளிட்ட குடிமைப் பொருட்களை குதிரைகள் மூலம் கட்டி எட்டு கிலோமீட்டர் நடந்தே சென்று வெள்ள கெவி கிராம மக்களுக்கு வினியோகம் செய்தனர். சுதந்திரத்திற்கு பிறகு ஒரு நாள் முழுக்க செலவு செய்து தங்களுடைய வேலைகளை விட்டு கொடைக்கானலுக்கு வந்து பொருட்களை வாங்கி சென்ற ரேஷன் பொருட்கள் தங்கள் வீடு தேடி சென்றதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருட்கள் தங்களுடைய கிராமங்களுக்கு சென்று விநியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 100 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்களுடைய வீடுகளிலேயே வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத்தில் தமிழ்வழிக் கல்வி: மாணவர்களிடையே வரவேற்பு – மா.சுப்பிரமணியன்