- Advertisement -
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்
தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி லோடு ஆட்டோ ஒன்று ஆனைகுளம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. சுரண்டை அருகேயுள்ள வாடியூர் மேல்புறம் பகுதியில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.


இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 நபர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்த பகுதி மக்கள் காயம் அடைந்தவரகளை ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சுரண்டை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


