

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறவிருக்கும் நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!
சென்னை நுங்கம்பாக்கம், மோகன் குமாரமங்கலம் தெருவில் வசிக்கும் தர்ஷன் குமார் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மென்பொருள் நிறுவனத்தின் பணியாற்றும் இவர், கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், அசோக் நகர் 53- வது தெருவில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 18) காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்றுமதி தொழில் செய்து வரும் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முபாரக் உசேன் என்பவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
250 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா!
சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் வழக்கமாக நடைபெறும் சோதனை தான் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


