

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஜூன் 28) நிறைவடைகிறது.
“தக்காளி விலை கிலோவுக்கு ரூபாய் 10 குறைந்தது”- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14- ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை முடிந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருப்பதால் காணொளி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.
கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கத் தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு!
அத்துடன், மருத்துவக் குழுவின் ஆலோசனை படி, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவும் இன்று (ஜூன் 28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.


