
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!
அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு நேற்று (ஜூன் 22) இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இரவு 10.45 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, சி.வி.சண்முகம் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.