வெற்றி, தோல்வி சகஜம்தான்.. ஆனால் “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், அதிமுகவில் தொடரும் தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுப்பதாகவும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.”


அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிளவு மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் காரணமாக அதிமுக வாக்கு வங்கி சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சி.வி.சண்முகம் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தற்போது அதிமுக இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் ஒரு அணியாகவும், மற்றொரு புறம் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கட்சிக்குள் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
கட்சியின் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள், மற்றும் புதிய அரசியல் நிலவரங்கள் அதிமுகவின் உள்ள சமநிலையை பாதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக நிர்வாகிகள் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், மற்றொரு தரப்பு ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறது. 2019 முதல் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் தொடர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அதிமுக வாக்கு வங்கி படிப்படியாக சரிந்து வருவதாகவும், இதை மீட்டெடுக்க கட்சிக்குள் விரிவான ஆலோசனை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்களை அதிக அளவில் இணைத்து கட்சியை புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என்றும், பிரிந்தவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்து வலுவான அமைப்பாக அதிமுகவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இருந்தும் அது புறக்கணிக்கப்பட்டதாகவும், பொதுக்குழு கூட்டம் நடத்தி அனைவரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுக்குழுவில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வதாகவும் சி.வி.சண்முகம் கூறினார்.
இதற்கிடையே, கட்சிக்குள் பொதுக்குழு கூட்டப்பட்டால் தமது நிலை பலவீனமாகலாம் என்ற அச்சம் காரணமாக எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுக உள்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்து வரும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…
