spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!

கனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!

-

- Advertisement -

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.கனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!கடந்த சில நாட்களாக விடாமல் கொட்டி வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 400க்கும், ஐஸ் மல்லி 600ல் இருந்து 300க்கும், ஜாதிமல்லி, முல்லை 400 ரூபாயில் இருந்து 300க்கும், கனகாம்பரம் 300ல் இருந்து 200க்கும், சாமந்தி 140ல் இருந்து 100க்கும், சம்பங்கி 80ல் இருந்து 20க்கும், பன்னீர் ரோஸ் 140 ரூபாயில் இருந்து 60க்கும், சாக்லேட் ரோஸ் 100ல் இருந்து 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் இதுகுறித்து கூறுகையில், “நேற்றிரவு முதல் காலை வரை கனமழை பெய்து வருவதால், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்து வியாபாரம் இல்லாமல் போனதாலும், மழையின் காரணமாக பூக்கள் விரைவாகவே அழுகிப் போவதாலும் பூக்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலைக்கு வியாபாாிகள் தள்ளப்பட்டுள்ளனா்“ என கூறினாா்.

சூப்பர் மாரி சூப்பர்… உங்கள் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது… மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி!

we-r-hiring

MUST READ