spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோர்க்கை நிறைவேற்றம்…இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்…

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோர்க்கை நிறைவேற்றம்…இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்…

-

- Advertisement -

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme)  செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளாா். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோர்க்கை நிறைவேற்றம்…இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம், மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற மாத ஊதியத்தின் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், அந்தக் கோரிக்கையின் தொடர்ச்சியாக புதியதாக TAPS திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

TAPS திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மாநில அரசு ஊழியர்கள் பெற்ற கடைசி மாத சம்பளத்தின் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பங்களிப்பாக செலுத்த வேண்டும். ஓய்வூதிய நிதிக்குத் தேவையான கூடுதல் நிதியை தமிழ்நாடு அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், TAPS திட்டத்தின் கீழ் 50 சதவீத பென்ஷன் பெறுவோருக்கும் அரசு ஊழியர்களைப் போலவே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படும். ஓய்வூதியதாரர் உயிரிழந்தால், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு 60 சதவீத குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். பணிக்காலத்தில் ஊழியர் இறந்துவிட்டால், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சங்கங்களின் வரவேற்பும் போராட்ட வாபஸும்

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்கங்கள் TAPS ஓய்வூதியத் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இதனுடன், ஜாக்டோ–ஜியோ (JACTO-GEO) அமைப்பு வரும் 6-ம் தேதி முதல் நடத்த திட்டமிட்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

மேலும், தங்களின் இதர கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இந்த அறிவிப்பை அரசு ஊழியர்கள் கொண்டாடினர்.

நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர்!

MUST READ