உலக அளவில் புகழ்பெற்ற தற்காப்புக் கலைகள் பயிற்சியாளரும், வில்வித்தை பயிற்சியாளருமான திரு. ஷிஹான் ஹுசைனி அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தனது பதிவில், ” இந்திய வில்வித்தை கழகத்தின் தேசியத் துணைத் தலைவராகச் சிறப்பாக பணியாற்றியவர். நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கியவர். சிற்பக் கலையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர். தனது மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், இறுதி வரை தைரியமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட திரு. ஷிஹான் ஹூசைனி அவர்கள் மறைவு, இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு. அவரது உறவினர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ”என தெரிவித்துள்ளார்.