spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை இருட்டடிக்கும் மத்திய அரசு – கனிமொழி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை இருட்டடிக்கும் மத்திய அரசு – கனிமொழி குற்றச்சாட்டு

-

- Advertisement -

கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய  ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை இருட்டடிக்கும் மத்திய அரசு – கனிமொழி குற்றச்சாட்டுசென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்  அக்கட்சியின்  துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் திமுக இலக்கிய அணி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை,மகளிர் அணி  மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டின் வரலாற்றை, தமிழ் மக்களின் பெருமைகளை தொடர்ந்து இருட்டடிப்பு செய்ய வேண்டும் அதை வெளிச்சத்திற்கு கொண்டுவரக் கூடாது

we-r-hiring

தமிழின் தொன்மையை குறைத்து காட்ட வேண்டும்  என்ற எண்ணத்தோடு மாத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இரும்பு காலம் தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியது,

தமிழ்நாட்டில் இருந்து தான் வரலாறு தொடங்கியது  என்று சொல்லக்கூடிய அளவிலான  ஒரு ஆய்வை செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொன்மை மிகுந்த  ஒரு பாரம்பரியம், ஒரு கலாச்சாரம் கொண்டிருக்கக் கூடிய தமிழ்நாட்டின் பெருமைகளை தொடர்ந்து புறக்கணிக்கக் கூடிய செயல்களில் தான்  மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தான் கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய  ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அவர்கள்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

லாக்கப் மரணங்கள் நிச்சயமாக நடக்கக் கூடாத ஒன்று, முதலமைச்சர் அவர்கள் நிச்சயமாக இதற்கு சரியான நடவடிக்கை எடுப்பார்  என்றும் கனிமொழி தெரிவித்தார்.

அன்புமணி ஆதரவாளர்கள் என்னை மிரட்டுகிறார்கள்! சேலம் எம் எல் ஏ பகீர் குற்றச்சாட்டு!

MUST READ