spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஞானசேகரனுக்கு ஆயுள்...மகளிர் நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பு!

ஞானசேகரனுக்கு ஆயுள்…மகளிர் நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பு!

-

- Advertisement -

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதி மன்றம்.ஞானசேகரனுக்கு ஆயுள்...மகளீர் நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பு!சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதது. அவர் மீது சாட்டப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ( மே -28 ) அன்று ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தாா். தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந் நிலையில், இன்று குற்றவாளி ஞானசேகரனின் மீதான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்ற நிலையில், புழல் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டாா். சென்னை மகளிர் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் குறையாத தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையும் ரூ.90,000 ஆயிரம் அபராதமும் வழங்கி நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளாா்.

we-r-hiring

மேலும் சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டாதால் 11 பிரிவுகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறியுள்ளாா். வழக்கை சிறப்பாக நடத்திய காவல்துறைக்கு நீதிபதி பாராட்டுகளை தெரிவித்துள்ளாா்.

மதுரை பொதுக்குழு! திமுகவின் அதிபயங்கர திட்டம்! கிடைக்கப் போகும் பலன் என்ன?

MUST READ