spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்ம் – 40க்கும் மேற்பட்டோர் கைது

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்ம் – 40க்கும் மேற்பட்டோர் கைது

-

- Advertisement -

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்ம் – 40க்கும் மேற்பட்டோர் கைது

சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற புரட்சி பாரதம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பூவை ஆறு தலைமையில் திரண்ட நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

we-r-hiring

அப்போது அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் டி எஸ் பி பிரதீப் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஒரே வண்ணத்தில் உடை… 39 ஆண்டுகளுக்கு பிறகு செல்ஃபி- கட்டிப்பிடி: அன்பை பரிமாரிய காவலர்கள்

MUST READ