Homeசெய்திகள்தமிழ்நாடுமுருக பக்தர்கள் மாநாடு பாடல்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் மனு

முருக பக்தர்கள் மாநாடு பாடல்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் மனு

-

- Advertisement -

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தடைவிதிக்க கோரி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.முருக பக்தர்கள் மாநாடு பாடல்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் மனுஇந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டால் மதமோதல் உருவாகும் அச்சம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வரும் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் பிரச்சாரம், சுவர் விளம்பரம் சமூக வலைதள பிரச்சாரங்கள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சமூக பதற்றம் ஏற்கெனவே உருவான நிலையில் இது போன்று முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதால், மத மோதல் ஏற்படும் அச்சம் உள்ளதாகவும் இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான இரண்டு பாடல்கள் மத வெறியை தூண்டும் வகையில் அமைந்துள்ளதால்,  முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி  மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் தலைமையில்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருப்பரங்குன்றம் மக்கள் சமத்துவமாக வாழ்ந்து வரும் நிலையில், ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் மதமாதலை தூண்டும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதால் மீண்டும் மதமோதல் ஏற்படும் சூழல் உருவாகுவதால் உடனடியாக அதற்கு காவல்துறையினர் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

 

MUST READ