Homeசெய்திகள்தமிழ்நாடுதொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு

-

- Advertisement -

மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்ட தென்மாநிலங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறதா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தொகுதி மறுவரையறை முயற்சி தென்மாநிலங்களுக்கு எதிரானதாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

we-r-hiring

மேலும், தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்க வேண்டும் என்றும், இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். “தேச நலனுக்காக துணை நின்றால், எங்களது அரசியல் உரிமைகளை பறிப்பீர்களா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜக அரசு எல்லை மீறி தென்மாநிலங்களை அரசியல் ரீதியாக பின்தள்ள முயற்சிக்கிறது என்றும், தமிழ்நாட்டு மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். “தமிழ்நாடு மற்றும் டெல்லி இடையிலான தேர்தல் என்ற நமது கருத்தை பாஜக தொடர்ந்து நிரூபித்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நோக்கில் சதி நடைபெறுகிறது என்றும், வடமாநிலங்களுக்கு அதிக அரசியல் வலிமை அளிக்கும் வகையில் தொகுதிகளை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சாடினார்.

“இது தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதி. அரசியல் எல்லைகளை கடந்து, நமது கோரிக்கை ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழ்நாடு இதைப் பொறுத்துக் கொள்ளாது,” என முதலமைச்சர் வலியுறுத்தினார்.

திமுக தலைவராக மட்டுமல்லாமல், சுயமரியாதையுள்ள தமிழனாகவும் இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன் என கூறிய அவர், தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால் பாஜக மிகப்பெரிய அரசியல் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.

இதற்கிடையில், “விந்திய மலைக்கு தெற்கே உள்ள ஒவ்வொரு தென்னிந்தியரும் இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க ஒவ்வொரு குடும்பமும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

MUST READ