spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

-

- Advertisement -

 

OPS

we-r-hiring

அ.தி.மு.க. கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவைப் பயன்படுத்த விதிக்கப்பட்டத் தடையை நீக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.11) தீர்ப்பளிக்கிறது.

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிய்வற்றைப் பயன்படுத்தி வருவதை எதிர்த்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 26- ஆம் தேதி மேல்முறையீடு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, இரு தரப்பிலும் நீதிமன்றத்தில் பல்வேறு வாதங்களும் முன் வைக்கப்பட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இன்று (ஜன.11) காலை 11.00 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது.

MUST READ