

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பனங்கிழங்கு அறுவடை தீவிரமடைந்துள்ளது. பொங்கல் பரிசுடன் பனங்கிழங்கையும் வழங்க பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின் அயலான்….. ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எட்டயபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் பனங்கிழங்கு அறுவடைச் செய்யும் பணியில் பனைத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல், பனங்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்தாண்டு போதிய அளவிலான மழை பெய்ததால் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு கிழங்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 20 எண்ணம் கொண்ட ஒரு கட்டு 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது எனவும் பனை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கமல் – பிக்பாஸ் மாயா குறித்த சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட புகழ், குரேஷி!
அத்துடன், பொங்கல் பரிசுடன் பனங்கிழங்கையும் வழங்க அரசு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பனங்கிழங்கு உற்பத்தியாளர் வரதராஜன் கூறுகையில், “ரேஷன் கடைகளில் பனங்கிழங்கு வழங்கினால் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். விளைச்சல் அதிகரித்துள்ளதால் கிராமங்களில் வீடுதோறும் விற்பனை செய்யப்படுகிறது. மணல் பரப்புகளில் விளைந்ததால் இந்த பனங்கிழங்குகள் சுவை மிகுந்ததாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
