Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி: அண்ணாமலை பெருமிதம்

தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி: அண்ணாமலை பெருமிதம்

-

- Advertisement -

புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி தாய்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி, திமுக இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி: அண்ணாமலை பெருமிதம்

திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கையை விளக்கும் வகையில் நேற்றைய தினம் (மார்ச் 23 ) பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை,மற்றும்  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா, மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுகவினர் அனைத்து மாணவர்களும் தமிழ் மொழியை கற்க வேண்டும் என்ற கட்டாயப்படுத்த வில்லை. ஆனால் பிரதமர் மோடி தான் தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையின் மூலமாக  தமிழை கட்டாய பாடமாக கொண்டுவந்துள்ளாா்.  புதிய கல்விக் கொள்கையில், மூன்றாவதாக கட்டாயம் ஹிந்தியை படிக்க வேண்டும் என்றதை மாற்றி, ஏதேனும் ஒரு இந்திய மொழியைப் படிக்க வேண்டும் என  மாற்றப்பட்டது.

திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது  மூன்றாவது மொழி கட்டாயமாக ஹிந்தியை கற்க வேண்டும் என்றார்கள்.  திமுக கூட்டுக் களவாணிகள். நம் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும், என அவர்கள் முடிவு செய்கின்றனர். மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்தவர்களும், ரவுடிகளாக இருந்தவர்களும், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் என அனைவரும் சேர்ந்து, தமிழகத்தின் கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும், என்று தீர்மானிப்பதை ஒத்துக்கொள்வீர்களா?

இந்த கல்விக் கொள்கையின் மூலம் ப்ளஸ் 1 வகுப்பில் ஆங்கிலம், கொரியன், ஜாப்னிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஸ், ரஷ்யன், போர்ச்சுகீசியம் போன்ற மொழிகள் படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசுப் பள்ளிகளில் படித்தாலும், தனியார்ப் பள்ளிகளில் படித்தாலும் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதின் அடிப்படை நோக்கமே புதிய கல்விக் கொள்கையின் சாராமசம்.

தமிழகத்தின் பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் தமிழில் தேர்ச்சியடையாதவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் உள்ளது. கல்வியின் நலை இப்படி மோசமாக இருக்கும் போழுது தமிழகம் வளர்ச்சி அடையும், என்று கனவு காண்கின்றனர். தமிழ் நாட்டில்  வரலாற்றில் இல்லாத  மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ் நாட்டில்  பாஜகவின் ஆட்சியில்  தனியார்ப் பள்ளிகளிலும் , அரசுப் பள்ளிகளிலும் அனைவருக்குமான சமமான கல்வி கொண்டுவரப்படும்” என கூறியுள்ளாா்.

தமிழ்நாடு இல்லைனா! டில்லியே இல்லை! தரவுகளுடன் ஜீவசகாப்தன்!

MUST READ