தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும், கடந்த காலங்களைப் போல் இந்த ஆண்டும் தொடரக்கூடாது என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலத்தின் போது, சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேக்கமடைந்ததால் சுகாதாரத்திலும், போக்குவரத்திலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மட்டுமல்ல திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, கடலூர் என பல மாவட்டங்களில் மழைக்காலத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம், தமிழக அரசு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் முறையாக மேற்கொள்ளாதது தான் என குற்றம்சாட்டியுள்ளாா்.
இந்த ஆண்டும் அதே நிலை தொடரக்கூடாது. எனவே, இந்த ஆண்டிலாவது மழைக்கால பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி தொடங்க வேண்டும். மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொது மக்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் சாலை வசதி, மின்சார இணைப்பு, அரசுப் பேருந்துகளில் மேற்கூரை, மரங்கள் பராமரிப்பு, கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் என அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், வடிகால் பணிகள், சுகாதாரப் பணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மழைக்காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளத்தால் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கனவே தொடங்கப்பட்டு இன்னும் நிறைவடையாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்பது தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் வலியுறுத்தியுள்ளாா்.
பாஜகவின் 18 சதவீத ஓட்டு! தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு! கிழித்தெடுத்த பொன்ராஜ்!