
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா உடல்நலக்குறைவால் தனது 102 வயதில் காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள என்.சங்கரய்யாவின் வீடு மற்றும் தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலும் அஞ்சலிக்காக, அவரது உடல் வைக்கப்பட்டது.
மறைந்த என்.சங்கரய்யாவின் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, செஞ்சட்டையில் இருந்த கட்சி உறுப்பினர்களின் பேரணியுடன் என்.சங்கரய்யாவின் உடல் அடையாற்றில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பா.ஜ.க.வில் இருந்து விலகினார் நடிகை விஜயசாந்தி!
அங்கு தலைவர்களின் புகழஞ்சலி கூட்டத்திற்கு பிறகு தமிழக காவல்துறையினரின் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் என்.சங்கரய்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. என்.சங்கரய்யாவின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


