Homeசெய்திகள்தமிழ்நாடுசுட்டெரிக்கும் வெயில் - பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா?

சுட்டெரிக்கும் வெயில் – பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா?

-

சுட்டெரிக்கும் வெயில் – பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா?

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7- ஆம் தேதி திறக்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஜூன் 7- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

MUST READ