Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடக்கம்!

பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடக்கம்!

-

 

பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடக்கம்!
Photo: Minister Anbil Mahesh Twitter

ஆதார் அட்டைகள் பெறுவதில் மாணவச் செல்வங்களுக்கு உள்ள குறைகளையும், நேர நெருக்கடிகளையும் போக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியான 3 ஹிட் படங்கள்

கோயமுத்தூர் மாவட்டம், காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இம்முகாமினைத் தொடங்கி வைத்ததுடன், மாணவிகளுக்கு ஆதார் அட்டைகளையும் வழங்கினார்.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000- க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவுச் செய்யும் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமை, மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டையை கிளப்பிய பதான்… இரண்டாம் பாகம் ஆண்டு இறுதியில் தொடக்கம்….

அந்த வகையில், “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் மாநில அளவில் இன்று பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கி வைக்கப்பட்டதையொட்டி, சேலம், குகை அரசு நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆதார் பதிவு சிறப்பு முகாமினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

MUST READ