ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடு குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை வழங்கியுள்ளாா்.கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் -2-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் துறைசார் இயக்குனர்கள், அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை வழங்கியுள்ளாா். மாணவர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். இடைநிற்றலை கண்காணித்து நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வழிவகை செய்யவேண்டும் என்றும், நடப்பாண்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளாா்.
26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…