spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம்!

எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) குறித்து எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம்!சென்னையில் நான்கு இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் ஒன்று சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே நடைபெற்றது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையேற்றார். திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் எதிராக பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். எஸ்.ஐ.ஆர். பணிகள் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடப்பதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

we-r-hiring

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, “எஸ்.ஐ.ஆர்.யை முழுமையாக எதிர்க்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு மிக குறுகிய காலமே உள்ள நிலையில், இந்தப் பணிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இதனை தேர்தல் முடிந்த பின் நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை,” என தெரிவித்தார்.

மேலும், பாஜக சொல்வதைத் தலையாட்டிப் பின்பற்றும் பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் உயர்வுக்கு எந்தத் தரவுகளும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. இது மிகவும் தலைகுனிவான நிலை. தமிழ்நாட்டின் வளர்ச்சி, நேர்மை, திறமையான ஆட்சி ஆகியவற்றைப் பார்த்து எரிச்சலடைந்த மத்திய அரசு, மாநிலத்துக்கான நிதியை குறைத்து வருகிறது. ஜி.எஸ்.டி பங்கு, சுகாதார நிதி என பல துறைகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது, எனவும் தெரிவித்தார்.

“உலகத்திற்கே வாக்கு சீட்டு முறைக்கு முன்பாகவே குடவோலை முறையை கொண்டு வந்தது தமிழகத்தில் தான்.  அதற்கான சான்றுகள் இருக்கிறது. எனவே, தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தத்தை அனுமதிக்கமாட்டோம்.

எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படாது என்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனமாக செயல்படுகிறார். தமிழகம் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. நிச்சயம் தமிழகம் போராடும், என உறுதியாக கூறினார்.

பருவமழை தொடங்கி இருக்கக்கூடிய நேரத்தில் மிகவும் குறுகிய காலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வது சிரமம் ஏற்படுத்தும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதனால், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனவும், தேர்தல் முடிந்த பின் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். நிச்சயம் இதற்காக தமிழகம் போராடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

வெளியே சவால் விடு! உள்ளே காலில் விழு! என்ன அரசியல் இது? மணி நேர்காணல்!

MUST READ