spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசொந்த சகோதரியிடம் பணம் பெற்று ஏமாற்றிய தம்பி....அதிரடியாக கைது செய்தது காவல்துறை!

சொந்த சகோதரியிடம் பணம் பெற்று ஏமாற்றிய தம்பி….அதிரடியாக கைது செய்தது காவல்துறை!

-

- Advertisement -

 

சொந்த சகோதரியிடம் பணம் பெற்று ஏமாற்றிய தம்பி....அதிரடியாக கைது செய்தது காவல்துறை!
File Photo

மூதாட்டியிடம் சுமார் 2.10 கோடி ரூபாயை ஏமாற்றிய அவரது உறவினர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

we-r-hiring

இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டம், இடிகரையைச் சேர்ந்த ராம்ராஜ் என்பவரின் மனைவி ரங்கநாயகி. வெளிநாட்டில் வேலைப் பார்க்கும், இவரது மகன் அனுப்பும் பணத்தை ரங்கநாயகி சேமித்து வந்துள்ளார். அவரிடம் இருந்து ரங்கநாயகியின் சகோதரர் பாலகிருஷ்ணன் சுமார் 8 கோடியே 10 லட்சம் ரூபாய் வாங்கி சொந்த தொழிலை செய்திருக்கிறார்.

இதில் ஆறு கோடியைத் திருப்பிக் கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 2 கோடியே 10 லட்சம் ரூபாயை ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் ரங்கநாயகி புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாலகிருஷ்ணன், அவரது மகள், மருமகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

அவர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சொந்த சகோதரியையே தம்பி ஏமாற்றியதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ