ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தசரா,ஆயுத பூஜை மற்றும் தீபாவளியையோட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. முக்கிய ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை 1,000 வரை பதிவாகியுள்ளது. எந்தெந்த ரயில்களுக்கு தேவை அதிகமாக உள்ளது என்று ஆய்வு செய்து, அதற்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் படி. செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 23 வரை சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை தாம்பரத்தில் இருந்து நாகர்கோயில் இடையேயும், செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை சென்னையில் இருந்து கோவை போத்தனூர் இடையே சிறப்பு ரயில். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8.00 மணி முதல் தொடங்கும் எனவும், பயணிகள் தங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க விரும்புகிறேன்…. சிவகார்த்திகேயன் பட நடிகை!



