அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய கல்விக் கொள்கையில், பாரதிய பாஷா சமிதி என்ற திட்டத்தின் கீழ், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கக்கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி இந்த கொள்கையின் அடிப்படையில் யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
குறைந்தது மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 இந்திய மொழிகளில் கற்பிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் ஆங்கிலத்துடன், தங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதல் இந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்கலாம் குறிப்பாக மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற எந்த மொழியாகவும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

இந்திய கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் இதுபோன்ற ஒரு அம்சம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்றும், எனினும் குறைந்த உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதனை அமல்படுத்துவதற்கு முன் வர வேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் கூடுதலாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதற்கு முன்வர வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை ஏற்க மாட்டோம் என்று இருக்க கூடிய நிலையிலும், தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை நடைமுறையில் உள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பெறுவது குறித்து பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியாக மாறிய வரலாறு – டிசம்பர் -6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்


