spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாணவரின் தாய்!

தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாணவரின் தாய்!

-

- Advertisement -

உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம் நாங்கள் இருந்த வீட்டின் மேலே ட்ரோன்கள் பறக்க விடப்பட்டது மிகவும் பயந்து விட்டோம் எங்களை மீட்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பஞ்சாபில் இருந்து திரும்பிய மாணவரின்  தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளாா்.தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாணவரின் தாய்!இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை மேகங்கள் தொடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் பாகிஸ்தானின் எல்லையோரம் மாவட்டங்களில் கல்லூரி பயிலும் மாணவ மாணவிகள் தமிழ்நாடு அரசு உதவியால் தங்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அந்த வகையில் இன்று மேலும் 16 மாணவ, மாணவிகள் 2 ரயில்களில் சென்னை திரும்பினர். அவர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சால்வை அணிவித்து வரவேற்றார். இதுவரை பதிவு செய்த 242 மாணவர்களும் தமிழ்நாடு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

we-r-hiring

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது, பதட்டமான சூழ்நிலை ஏற்பட்ட பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முயற்சியில் பதிவு செய்த 242 தமிழ்நாடு மாணவர்களை மீட்டு தமிழ்நாட்டில் தங்க வைத்து பின்பு சென்னை அழைத்துவரப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் 16 மாணவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். 211 மாணவர்கள் மற்றும் 31 சுற்றுலா சென்றவர்கள் என மொத்தம் 242 பேர்கள் மீட்கப்பட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் கண்ணிமை போல காஷ்மீரில் இருக்கும் தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர். முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

பின்னர் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில்  மாணவர்கள் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசின் உதவி என்னை கண்டறிந்து அழைத்த பொழுது தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வருகிறோம் என சொன்னவுடன் மகிழ்ச்சி ஏற்பட்டது. உணவு இருப்பிடம் என அனைத்தையும் வழங்கி தாய் வீட்டில் இருப்பது போல உணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக சென்று விடுவோம் என்ற நம்பிக்கை வந்தது. தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.”

ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி

MUST READ