Homeசெய்திகள்தமிழ்நாடுஇருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை -  அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

இருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை –  அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

-

- Advertisement -

தமிழகத்தில் பள்ளிக்கல்வி முறையில் இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றப்படும் என்றும், இதில் மத்திய அரசு எத்தகைய அழுத்தங்களைக் கொடுத்தாலும் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை -  அமைச்சர் ராஜ்மோகன் உறுதிதமிழக அரசின் புதிய தொடக்கப்பள்ளி பாடத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சிகள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திரமோகன், புதிய பாடப்புத்தகங்கள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து நேரடியாக கருத்துக்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் மேம்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். மாணவர்களுக்கு வலுவான அடித்தளக் கல்வி வழங்கும் நோக்கத்திலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

we-r-hiring

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், பாடப்புத்தகங்களை உருவாக்க பல நாட்கள் உழைத்த கல்வியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார். எளிமையான முறையில் கற்பித்தால் தான் மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் சென்று சேரும் என்றும், ஆசிரியர்கள் குறைவாக பேசிக் குழந்தைகளை அதிகம் பேச வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்த ஒரு குழந்தையும் கற்றலில் பின்தங்க விடக்கூடாது என ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தற்போது மாநில அளவில் பயிற்சி பெறும் கருத்தாளர்கள் மாவட்டங்களுக்கு சென்று ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவித்தார். ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய கற்றல் முறையை முழுமையாக செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் வகுப்பறைகள் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்படும் என்றார். அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் சுமார் 2500 கோடி ரூபாய் நிதியை பெற மத்திய அரசுடன் சமரசம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி வராதது ஏற்க முடியாத ஒன்று. எந்த மறைமுக அழுத்தத்திற்கும் தமிழக அரசு அடிபணியாது” என்று தெரிவித்தார்.  இருமொழிக் கொள்கை குறித்து அவர் கூறியதில், “இருமொழிக் கொள்கை த.வெ.க.வின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் எந்த இடத்திலும் சமரசம் கிடையாது. கொள்கை சமரசத்திற்கு எங்கும் இடமில்லை” என உறுதியாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தோல்வியை ஒத்துக்கொள்வதில்லை – சி.வி.சன்முகம் குற்றச்சாட்டு

MUST READ