spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு

ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு

-

- Advertisement -

ஜூலை 15ம் தேதி முதல் நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டண வசூல் செய்யும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் – மத்திய அரசு அறிவிப்புநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இருசக்கர வாகனம் தவிர அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஜூலை 15ம் தேதி முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவிக்க உள்ளதாகவும், இந்த வருவாய் மூலம் சுங்கச் சாலைகளை மேம்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

we-r-hiring

சமீபத்தில் நாடு முழுவதும் வரம்பற்ற முறையில் ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி சுங்க சாலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனை ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் ,அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஜூலை 15ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்த இருப்பதாக சில தேசிய செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிடும் எனவும் கூறப்படுகிறது.

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 5 படங்கள் திரைக்கு வருகிறது!

MUST READ