- Advertisement -

சென்னை திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய விரிசலை சரிசெய்யும் பணியில் 10- க்கும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக இந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ட்ரீட் ரெடி…. ‘தலைவர் 170’ அப்டேட்!
இதன் காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
