spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் - டிடிவி தினகரன் சூளுரை..!

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் – டிடிவி தினகரன் சூளுரை..!

-

- Advertisement -
அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?- TTV.தினகரன் கேள்வி
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.

சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணிக்கு அவசரம் இல்லை அரசியல் ரீதியாக சூழ்நிலைகள் மாறி வருகிறது. விரைவில் கூட்டணி குறித்து முடிவுக்கு வருவோம். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்காக வழங்கப்பட்ட படிவத்தில் இரண்டாவது பகுதியில் 2005 இல் எந்த பகுதியில் வாக்காளராக இருந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள் . அதை பாமர மக்களால் பதிலளிக்க முடியாது. அதை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும். அதை தவிர்க்க வேண்டும் அல்லது திருத்த பணியை தேர்தலுக்கு பின்னர் தள்ளி வைக்க வேண்டும்.

2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறாது என எழுத்து பூர்வமாகவே கொடுத்தேன். கடந்த 5 ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் தவறாக உள்ளது. அவருக்கு யாரை பார்த்தாலும் பயம். தலைமை பண்பு என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்கொள்ள வேண்டும். ஜானகி அணியை சேர்ந்த பன்னீர்செல்வத்தையே முதலமைச்சர் ஆக்கியவர் ஜெயலலிதா. தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசிய எத்தனையோ பேரை அரவணைத்து சென்றவர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியை கொண்டு வர தன்னம்பிக்கையோடு செயல்பட்டார் ஜெயலலிதா. அதே நேரத்தில் நான் எடப்பாடி பழனிசாமியுடன் சேருவதற்கு வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைவராக இருப்பதற்கு தகுதியே இல்லை.

we-r-hiring

விஜய் அவர்களின் அரசியல் பிரவேசத்துக்கு பிறகு அதிமுக மூன்றாவது இடத்துக்கு தான் செல்லும். 2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கும் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கும் தான் போட்டியே.

EPS is ready to accept a Vijay-led alliance - TTV Dhinakaran

மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு போனது துரதிருஷ்டவசமானது. வருத்தம் அளிக்கிறது.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததும், பல கட்சிகள் கூட்டணிக்காக எங்களை அணுகினார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை முடிவெடுக்கவில்லை. அவை அனைத்தும் ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது. அரசியலில் இன்னும் சில மாற்றங்கள் வர உள்ளது. அதனால் அமமுக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும்.

அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் திமுகவில் சேர்கிறார்கள். எங்களுடன் பலர் தொடர்பில் இருந்தாலும் பழனிசாமியை வீழ்த்த திமுக தான் சரியான இடமாக இருக்கும் என அங்கு சென்றுள்ளார்கள். அமமுக தனியாக பழனிசாமியை தனியாக வீழ்த்தும் சக்தியுடன் இல்லை. வளர்ந்து வருகிறோம். எங்களை விட திமுக , அதிமுக பெரிய கட்சி என்பது உண்மை.

எடப்பாடி எனும் துரோக சக்தி வரும் தேர்தலில் நிச்சயமாக வீழ்த்தப்படுவார். அதிமுகவில் இருப்பவர்கள் மீது எந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. பழனிசாமி எங்களுக்கு இழைத்த துரோகத்துக்காக அவரை வீழ்த்த செயல்படுகிறோம். அவரை வீழ்த்தியபின் எம்ஜிஆர் விதித்த சட்டத்திட்டத்தின்படி அதிமுகவை மீட்டெடுப்போம்.

எங்களை திமுக பி டீம் என சொல்கிறார். எங்களை இயக்குவதே பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க காரணமானவர்கள் நாங்கள். நான் ஆர்கே நகர் தேர்தலில் நான் வேட்பாளராக நின்றதால் எடப்பாடிக்கு பயம் வந்துவிட்டது. என்னை நீக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெளிச்சம். அதனால் உருவானது தான் அமமுக . அவர் தான் திமுக ஆட்சி அமைக்க காரணமாக இருந்தார். நாங்கள் எப்படி பி டீம்மாக இருக்க முடியும்?

என்னுடன் வந்தவர்கள் சிலர் தனிப்பட்ட சுயநலனுக்காக திமுகவுக்கு சென்றார்கள். அவர்கள் யாரும் என்னுடன் சண்டை போட்டு செல்லவில்லை..அப்படி சென்றவர்கள் இதுவரை என்னை குறித்து அவதூறாக பேசவில்லை. என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். அதனால் நான் திமுகவுக்கு சென்றால் தான் எதிர்கொள்ள முடியும் என செந்திபாலாஜி என்னிடம் சொல்லிவிட்டு தான் திமுக சென்றார்.

எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியலை முன்னெடுக்கிறார் என செங்கோட்டையன் சொன்னது உண்மை தான். ஆனால் என்னை அரசியலுக்கு கொண்டு வந்ததே ஜெயலலிதா தான். அவரின் நிழல் போல என்னை வைத்திருந்தார். பின்னர் அவரே என்னை கட்சியில் இருந்து நீக்கினார். நானும் ஒதுங்கி இருந்தேன். ஆனால் சென்னையில் தான் இருந்தேன். சில மஞ்சள் பத்திரிகைகள் நான் பாண்டிச்சேரியில் இருப்பதாக எழுதினார்கள். எடப்பாடி பழனிசாமி அந்த மஞ்சள் பத்திரிகை போல தரம் தாழ்ந்து பேசுவது தான் ஆச்சரியம் அளிக்கிறது.

அமமுக தொடங்கப்பட்டதே எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த தான். எங்களின் முதல் குறிக்கோள் துரோகத்தை வீழ்த்துவது. அதன் பின் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். அதில் யார் வேண்டுமானாலும் எந்த தொண்டர் வேணுமானாலும் போது செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியை மாற்றுவோம்.

விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? - டி.டி.வி.தினகரன் ஆவேசம்

செங்கோட்டையன் 1989 இல் தனக்கு எந்த பதவியும் கேட்கவில்லை. ஜெயலலிதாவே என்னிடம் செங்கோட்டையனுக்கு எந்த பதவியும் இல்லையா என என்னிடம் கேட்டார். ஜெயலலிதாவே பதவி கொடுத்தால் கொடுக்கட்டும் என சொன்னவர் செங்கோட்டையன். முதலமைச்சர் வாய்ப்பு செங்கோட்டையனுக்கு வந்தது உண்மை. 2001 இல் பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கிய போது செங்கோட்டையன் பெயரும் பட்டியலில் இருந்தது.

முதலமைச்சர் பதவிக்கு செங்கோட்டையன் தகுதியானவர். அந்த ஆசை எங்களுக்கும் இருந்தது..

ஜெயலலிதா இருந்தவரை திமுக vs அதிமுக என்ற நிலை தான் இருந்தது. ஆனால் இன்றைய கால சூழ்நிலை திமுக vs அமமுக என்ற நிலை தான் உள்ளது. அது தான் எதார்த்தம். 30 வருடம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குவாரா? அப்படி முதலமைச்சர் ஆக்க எடப்பாடி பழனிசாமி என்ன காமராஜரா கக்கனா.

வரும் தேர்தலில் என்னுடன் இருப்பவர்களை சட்டமன்ற உறுப்பினர் அக்கா வேண்டும் என்பதே என் இலக்கு. அதை நோக்கி என் பயணம் இருக்கும். எங்களை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்துள்ளார். தேர்தல் நேரத்தில் என்ன நடக்கிறது என பாருங்கள்.

கொடநாடு வழக்கு குறித்து எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு – வாட்ச் மேனை கட்டிப்போட்டு கொடநாடு பங்களாவுக்குள் சென்று முக்கிய கோப்புகளை தேட தான் சென்றார்கள். அது யார்? ஜெயலலிதா இருந்த போது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் குறித்து ஜெயலலிதா கேட்ட ரிப்போர்ட்களை உளவுத்துறை கொடுத்த தகவல்கள் போயஸ் கார்டனிலேயே இருந்தது. அவைகளை படித்துபார்த்து நானும் மருத்துவர் வெங்கடேஷ் கிழித்து போட்டோம். அதில் பலரின் வண்டவாளங்கள் இருந்தது. அதை போல கொடநாட்டில் இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை யாரோ பயமுறுத்தி இருக்கிறார்கள். அதனால் நானும் சசிகலாவும் இல்லாத நேரத்தில் கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்தார்கள். அதில் எத்தனை பேர் இறந்தார்கள். இதனால் பயன் அடைந்தது யார்? யார் ஆட்சியில் நடந்தது. எடப்பாடி பழனிசாமி குறித்த தகவல்களை வெளியில் விட்டுவிடுவேன் என பயந்து தான் கொடநாடு பங்களாவுக்குள் சென்றார்கள். ஒரு போதும் நான் பிளாக்மெயில் அரசியல் செய்ய மாட்டேன். நான் சவுக்கு சாட்டை கிடையாது. என்றுமே பழனிசாமிக்கு தான் சிம்மசொப்பணம் தான். அவரை வீழ்ந்தாமல் நான் ஓய மாட்டேன். நான் வீழ்த்தும் முன் அவரே வீழ்ந்து விடுவார். அவரே கொல்லி கட்டையை தலையில் வைத்துக்கொண்டார்” என்று தெரிவித்தார்.

MUST READ