Homeசெய்திகள்தமிழ்நாடுவி.சி.க. பிரமுகரின் வீடு உள்பட 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

வி.சி.க. பிரமுகரின் வீடு உள்பட 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

-

 

வி.சி.க. பிரமுகரின் வீடு உள்பட 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சென்னை மற்றும் கோவையில் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்!

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதி, எழும்பூர், வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் தனியார் மதுபான பார் உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக, 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதன் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை தொடர்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்குவதற்கான நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்ட புகாரில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அருவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ இவர் தான்!

வருமான வரித்துறை சோதனைகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ