spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம்- இன்பதுரை ஆவேசம்

அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம்- இன்பதுரை ஆவேசம்

-

- Advertisement -

அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம் என, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கூறியுள்ளார்.அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம்- இன்பதுரை ஆவேசம்எடப்பாடி பழனிச்சாமி குறித்து யூடியூபர் ஸ்ரீ வித்யா பேசியது சர்ச்சையாகி இருந்த நிலையில், அவதூறு பேசியதாக ஸ்ரீ வித்யா மீது சைதாப்பேட்டை நிதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜூன் 26-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்ததையொட்டி, சென்னை சைதாப்பேட்டை நிதிமன்றத்தில் ஸ்ரீ வித்யா இன்று நேரில் ஆஜரானார். அப்போது, வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான பிரதிகளை அவர் பெற்றுக் கொண்டார்.

இந்த விவகாரம் குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளவருமான இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இழிவுபடுத்தும் விதமாக, கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கி இருந்ததை தவறாக சித்தரித்து, யூடியூபர் ஸ்ரீ வித்யா வீடியோ வெளியிட்டதாக குறிப்பிட்டார்.

we-r-hiring

எடப்பாடி பழனிச்சாமிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஸ்ரீ வித்யா நேரில் ஆஜரானதாக இன்பதுரை தெரிவித்தார். அதிமுகவுக்கு எதிராக வசை பாடுபவர்களின் வாயை நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம் என அவர் கூறினார். அமைச்சரைப் பற்றி பேசினால் இரவில் சென்று கைது செய்யும் காவல்துறை, எதிர்க்கட்சி தலைவரை பற்றி பேசினால், நடவடிக்கை எடுப்பது இல்லை என்று இன்பதுரை புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், யூடியூபர் ஶ்ரீவித்யா தொடர்பான வழக்கின் மறுவிசாரணை, வரும் 31.07.2025- க்கு மாற்றப்பட்டுள்ளது.

வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலாக கொண்டுள்ளது திமுக அரசு-அன்புமணி இராமதாஸ் கண்டனம்

MUST READ