Homeசெய்திகள்14 ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்...

14 ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தலைவர் தகவல்

-

- Advertisement -

வரும் 13,14 தேதிகளில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தகவல். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை கோவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.

தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும் வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த இரண்டு வானிலை நிகழ்வுகளின் காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட வடஉள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..13, 14 தேதிகளில் வடகடலோர மாவட்டங்களிலும் 13-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும் , 14 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி அரபிக் கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, இரண்டு மூன்று நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருவார காலத்திற்கு மிதமான மழை இருக்கும். வங்க கடலில் 12-ஆம் தேதி, மேலடுக்கு சுழற்சி உருவாவதற்கான சூழல் நிலவுகிறது.

வங்க கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருக்கும். இதை கண்காணித்து, எப்பொழுது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதை கணிக்கலாம்.

குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதியில் தென்மேற்கு பருவமழை விலகிய பிறகு தான் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்…

MUST READ