Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? - இந்த ஆண்டில் மூன்றாவது முயற்சி

அமெரிக்காவில் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? – இந்த ஆண்டில் மூன்றாவது முயற்சி

-

- Advertisement -

அமெரிக்காவில் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? -  இந்த ஆண்டில் மூன்றாவது முயற்சிஅமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது.

சனிக்கிழமையன்று (அக்டோபர் 12), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சந்திப்பில், ஒரு வேட்டைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நிறைந்த கைத்துப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு சோதனை சாவடியில் காரில் போலி பாஸ்போர்ட், வெடிமருந்துகள், துப்பாக்கியுடன் வந்த நெவாடாவை சேர்ந்த 49 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதே நாளில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது தெரியவந்தது. கடந்த செப்டம்பர் & ஜூலை மாதங்களில் நடந்த கொலை முயற்சிகளில் இருந்து டிரம்ப் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  டிரம்புக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும், இந்தச் சம்பவம் அவரது பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதிக்கவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகப் பேசிய உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய நபரை ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று விவரித்துள்ளார்.  இந்த சம்பவம் டிரம்ப் அல்லது பேரணியில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. டிரம்ப் மீதான தாக்குதல் தான் அந்த நபரின் நோக்கம் என்பதை நிரூபிக்க இயலாது என்றும் கூறுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் இதே இடத்தில்  ஒருவர் ஸ்னைப்பர் துப்பாக்கியால் டிரம்பின் பேரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் கூட்டத்தில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த டிரம்ப், தனது காதுகளில் ரத்தம் வழிய அங்கிருந்து வெளியேறினார்.

அதே போன்று செப்டம்பரில், புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள ‘டிரம்ப் சர்வதேச கோல்ஃப் கிளப்புக்கு’ வெளியே கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் தற்போது சிறையில் உள்ளார். அந்த நபர் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே புதர்களுக்குள் ரைபிள் துப்பாக்கியுடன் மறைந்திருந்தபோது பிடிபட்டார்.

முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!

இந்த ஆண்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட இரண்டு கொலை முயற்சிகளைத் தொடர்ந்து, மூன்றாவதாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது அதிர்ச்சியாளிக்கிறது.

இந்நிலையில் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.

MUST READ