spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை

ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை

-

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தமிழர் சுட்டுக்கொலை

தஞ்சையை சேர்ந்த முகமது ரகமதுல்லா சையது அகமது ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய உணவகம் ஒன்றில் வேலை பார்த்துவந்த முகமது (32) சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவர், ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த துப்புரவு பணியாளரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. மேலும் அவர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார்.

we-r-hiring

இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை

இதையடுத்து முகமது மீது தாக்குதல் நடத்திய போலீசார் சுட்டுக்கொன்றனர். துப்புரவு தொழிலாளர் மற்றும் பிடிக்க முயன்ற தங்களையும் தாக்க முயன்றதால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் முகமது உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

முகமது 2019 ஆம் ஆண்டு விசிட்டிங் விசா மூலம் ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். முகமதுவின் அம்மா ஆமினா, அக்கா மசூதி ஆகியோர் உள்ளனர். இவரது அண்ணன் ஹபீல் சென்னையில் பணியாற்றிவருகிறார்.

MUST READ