சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயனின் 21 வது படமான இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக முகுந்த் V என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த படமானது வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர இருக்கிறது.
அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 21) கலைவாணர் அரங்கத்தில் அமரன் திரைப்படத்தின் அறிமுக விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கு? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “துப்பாக்கி கனமாக தான் இருக்கும் அதை கரெக்டாக ஹேண்டில் பண்ண வேண்டும்” என்று பதிலளித்தார் சிவகார்த்திகேயன். அதாவது கோட் படத்தில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்துவிட்டு செல்வார். அப்போது சிவகார்த்திகேயன், விஜயிடம், “நீங்கள் இதைவிட முக்கியமான வேலையாக செல்கிறீர்கள். நீங்கள் அதைப் பார்த்துக்கோங்க. நான் இதை பார்த்துக்கிறேன்” என்று கூறுவார்.
இந்த வசனத்திற்கு பல அர்த்தங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு செல்கிறார். எனவே சினிமாவை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார் என்பது போன்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் முகுந்த் கதை கேட்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், “இது எங்கேயோ யாருக்கோ நடக்கிற கதை நம்ம ஆளோட கதை. ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி ஆறுதலாக இருக்க வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது பற்றிய கதை. கடினமான வேலையில் இருப்பவரை புரிந்து கொண்டு பண்ணியிருக்காங்க. இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்று சொன்னபோது எனக்கு தோணுன ஒரே ஒரு விஷயம், மக்கள் யோசிக்க வேண்டியது நம்ம தீபாவளி கொண்டாடுகின்ற நேரத்தில் எங்கேயோ ஒருத்தர் உயிரை விடுகிறார் என்று. இந்த கதை கேட்டு எனக்கு தூக்கம் வரவில்லை அது என்னை உலுக்கியது.
அடுத்த நாள் எழுந்திருக்கும் போது இந்த படம் பண்ணலாம் என்று முடிவு செய்தேன். இந்த படம் போரை பதிவு பண்ற படம் இல்லை ஒரு ராணுவ வீரனுடைய வாழ்க்கையை சொல்கின்ற படம்” என்று அமரன் படம் குறித்து பேசியுள்ளார்.
தீபாவளி ரிலீஸ் என்று சொன்னப்போ எனக்கு தோணுன விஷயம் இதுதான்…. ‘அமரன்’ விழாவில் சிவகார்த்திகேயன்!
-
- Advertisement -