spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தெலுங்கானா அரசிடம் மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

தெலுங்கானா அரசிடம் மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

-

- Advertisement -

நன்னூல் சூத்திரம் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டது அரசியலுக்கும் கூட்டணிக்கும் பொறுந்தாது, பாஜகவிலிருந்து விலகவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

 தெலுங்கானா அரசிடம் மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பினை காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ளது வரவேற்க தக்கது என்றும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் என வலியுறுத்தினார். தெலுங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துவங்கியுள்ளது மாநில அரசுக்கு அதிகாரமில்லை என தவறான தகவலை பரப்பிய திமுகவின் சமூக நீதி முகமுடி உடைந்துள்ளதாகவும், தெலுங்கானாவில் நேற்று துவங்கிய சாதிவாரி கணக்கெடுப்பு 30 ஆம் தேதி முடிந்து டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

we-r-hiring

கணக்கெடுப்பு பணியில் 80 ஆயிரம் பணியாளரும் 18 ஆயிரம் மேற்பாளையர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். தமிழக அரசு நினைத்தால் 2 லட்சம் பணியாளர்களை கொண்டு 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விடலாம் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தெலுங்கானாவில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு தேசிய அளவில் முன்மாதிரியாக இருக்குமென அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறும் மு.க ஸ்டாலின் இனியாவது கைவிட வேண்டும் என கூறினார். தமிழக அரசு மருத்துவமனையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதில் மருத்துவர்களை நியமிக்காமல் உள்ளது கண்டிக்கதக்கது. இதனால் மக்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க சாத்தியமில்லை என்பதால் இந்நிலை மாற்றபட வேண்டும். மருத்துவ துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவதால் மருத்துவ துறைக்கு 40 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கூல் லிப் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதை நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், கர்நாடகத்திலிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யபடுவதால் மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் அடிமையாகி வருவது கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் செயல்பட்டு வருவதால் அதனை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் கற்பித்தல் நிர்வாக பணி பாதிக்கப்படுவதாகவும், தொடக்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே தலைமை ஆசிரியர்களை நிரப்ப உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை செய்து நிரப்ப வேண்டும். பழையன கழிதலும் புதியனபுகுதலும் வழுவல காலவகை நானே என்ற நன்னூல் தன்னுடைய சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் போடப்பட்டதால் பாஜகவிலிருந்து விலகுவதாக கருத்துகள் கூறபட்டதால் அப்படி எதுவும் இல்லை என்றும் பாஜகவிலிருந்து விலகவில்லை என்றும் இது அரசியலுக்கு சம்பந்தமில்லை என விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒன்னரை ஆண்டுகள் உள்ளதால் பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து அறுவிப்போம் என்றும் நன்னூல் சூத்திரம் குறிப்பிட்டது அரசியலுக்கும் கூட்டணிக்கும் பொறுந்தாது 1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர், காவல்துறையினர் செயல்பாடுகள் குறித்து ஈரல் அழுகி விட்டதாக கூறினார். காவல் துறையினர் கடலூரில் நடந்து கொண்டது ஈரல் மட்டும்லல மூளை, இதயம் எல்லாமே கெட்டுபோய் உள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் புதியதாக தொடங்கும் கட்சிகள் திராவிடத்தினையும் தமிழ் தேசியத்தினை முன்னெடுப்பது குறித்து பதில் அளிக்க தயாராக இல்லை எது சொன்னாலும் நளினமாகவும், நாகரிகமாக இருக்க வேண்டுமென கலைஞர் கூறுவர். அதுபோல் தான் நாங்களும் உள்ளோம் வன்னியர் சங்கத்தின் தலைவர் கழுத்தை வெட்டுவோம் என்று கூறுகிறவர் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறையினர் ஒருவருக்கு சார்பாக செயல்படுகிறது.

எஸ் சி எடி வழக்கு காவல் துறையினர் போடுகிறார்கள் நாங்கள் ஏமாளிகள் அல்ல சிறைக்கு போவதோ வழக்குகளை சந்திப்பதே எங்களுக்கு புதிதல்ல. கடலூர் காவல் துறை வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து அறிந்து நடந்து கொள்ள வேண்டும் ஒரு சார்பாக நடக்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது “தகுதி வரைமுறைகளை ” மாற்ற முடியாது – உச்ச நீதிமன்றம்

MUST READ