கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில், திருமணமான ஒரு பெண்ணின் குடும்பம், அனுமதியின்றி, அவரது கணவர் வீட்டில் நீண்ட காலம் தங்கியிருப்பது, ஒரு கொடுமையாக கருதுகிறது. இந்த முடிவு திருமண உறவுகளில் பரஸ்பர மரியாதையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
2008 ல் மனைவி தனது கணவரின் கோலாகாட் வீட்டை விட்டு வெளியேறிய போதிலும், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் நண்பரும் தொடர்ந்து கணவர் வீட்டிலேயே தங்கியுள்ளனர். திருமணமான ஒரு பெண்ணின் நண்பர்களும், குடும்பத்தினரும் அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது கணவர் வீட்டில் நீண்ட காலம் தங்குவது கொடுமைக்கு சமம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் டிசம்பர் 19 ம் தேதி “கொடுமையின் அடிப்படையில்” ஒருவருக்கு விவாகரத்து வழங்கியது. “கணவனின் விருப்பத்திற்கு மாறாக, மனைவி குற்றச்சாட்டுகளை முன் வைத்தபோதிலும், அவரே வீட்டை விட்டு வெளியேறிய போதும் ஒரு பெண் தன் கணவன் வீட்டில் அவரது நண்பர்கள், குடும்பத்தினரை இப்படித் திணிப்பது, கண்டிப்பாகக் கொடுமையாகக் கருதப்படலாம்.
அந்தப்பெண்ணின் வாழ்க்கையை சாத்தியமற்றதாக்கி விட்டது. இது கொடுமையின் பரந்த எல்லைக்குள் வரும்” என்று நீதிமன்றம் கூறியது.
2008 -ல் மனைவி தனது கணவரின் கோலாகாட் வீட்டை விட்டு வெளியேறிய போதிலும், அவரது குடும்பத்தினரும், நண்பரும் தொடர்ந்து அங்கேயே தங்கினர். மனைவி பின்னர் 2016 -ல் உத்தரபாராவுக்கு குடி பெயர்ந்தார். அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தன் மனைவி தாம்பத்திய உறவைப் பேணுவதிலோ அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதிலோ ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டிய கணவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறினார்.
திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கணவர் 2008 ல் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மேற்கு வங்காளத்தில் உள்ள நபத்விப்பில் திருமணம் செய்து கொண்டு, 2006 ல் கோலாகாட் என்ற இடத்திற்கு குடியேறி உள்ளனர். அங்கு கணவர் பணிபுரிந்தார்.
2008 ஆம் ஆண்டில், மனைவி கொல்கத்தாவில் உள்ள நர்கெல்டங்காவிற்கு இடம்பெயர்ந்தார். சீல்டாவில் உள்ள தனது பணியிடத்திற்கு அருகாமையில் இருப்பதால் இது மிகவும் வசதியாக உள்ளது என்று தெரிவித்த அவர் குறுக்கு விசாரணையின் போது, உதவியற்ற சூழ்நிலை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினார்.
அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், தாம்பத்திய உறவில். குழந்தை பெற்றுக் கொள்வதில் மனைவி ஆர்வம் காட்டவில்லை என்று கூறி, கொடுமையின் அடிப்படையில் கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.


