spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபேருந்து கட்டண உயர்வு… பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

பேருந்து கட்டண உயர்வு… பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

-

- Advertisement -

நிலை பேருந்துகளுக்கு கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.பேருந்து கட்டண உயர்வு… பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு…மேலும், இது குறித்து போக்குவரத்து துறை  ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு,  சென்னை மற்றும் ஈரோடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் கட்டண உயர்வு கோரி தொடுத்த வழக்கு எண்கள். W.P.No.27122/2024 0 27127/2024-ல், உயர் நீதிமன்றம் பிறப்பித்த 23.01.2025 ஆம் தேதி உத்தரவுபடி, தமிழ்நாடு அரசு, பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றினை நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, போக்குவரத்து ஆணையர் அவர்களின் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவில் அவ்வப்போது உள்ள டீசல் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்விற்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கட்டண உயர்வு வழங்கிட குறியீட்டு முறை (indexing method) வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலைப் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முதன்மை செயலாளர் / போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரிக்கு நேரிலோ (அல்லது) மின்னஞ்சல் (tc.tn@nic.in) / தபால் மூலமாகவோ இந்த அறிவிப்பு கிடைக்கப் பெற்ற மூன்று வார காலத்திற்குள் அனுப்பி வைக்கலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம்  அறிவுறுத்தி இருந்தது. தமிழ்நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு  பேருந்துகளுக்கான கட்டணம் கடைசியாக  நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த குழு தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

MUST READ