spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?

-

- Advertisement -

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை “வீடு வீடாக சென்று திருத்தம்” செய்யும் நடவடிக்கையை [special intensive revision (SIR)] தேர்தல் ஆணையம் (EC) எடுத்து வருகிறது.

2003க்குப் பிந்தைய வாக்காளர்களிடம் அவர்களது பெற்றோர்களின் பிறப்பு ஆதாரங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் அதிக அளவில் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் ஆபத்தான வேலையை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தேசிய குடியுரிமை சட்டத்தின் (NRC) போர்வையில் இதை செயல்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

we-r-hiring

ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் (EC) வெளியிட்ட உத்தரவுப்படி, 2003ல் சேர்க்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பின் தற்போது மீண்டும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டியலில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதனால் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் வேலை நடைபெற்று வருவதாக அதில் தெரிவித்திருந்தனர்.

பிறப்புக்கான ஆதாரங்கள்

1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்புப் பிறந்தவர்கள் தங்களுடைய பிறப்புக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் 1987 ஜூலை 1 முதல் 2004 டிசம்பர் 2க்குள் பிறந்தவர்கள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரில் ஒருவர் தொடர்பான பிறப்பு சான்றிதழ்/குடியுரிமை ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

2004 டிசம்பர் 2க்கு பின் பிறந்தவர்கள் தங்களுடைய சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் இருவரின் இருப்பிடச் சான்றிதழும், அவர்கள் எப்பொழுதில் இருந்து குடியிருந்து வருகிறார்கள்/தேதி உள்ளிட்ட ஆதாரங்களையும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

பீகார் மாநிலத்தில் தற்போது சுமார் 7.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில்   வாக்குச்சாவடி அதிகாரிகள் [Booth Level Officers (BLOs)] ஜூலை 26 வரை வீடு வீடாக சென்று சரிபார்ப்பை மேற்கொள்கின்றனர்.

2003க்கு முன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு பூர்வீக குடியுரிமை சான்று (presumption) வழங்கப்படும் எனவும், அதற்குப் பின் உள்ளவர்கள் மீதான நிலை தெளிவற்றதாக இருக்கிறது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?முக்கிய குற்றச்சாட்டுகள்:

1. 2003க்குப் பின் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை திடீரென ‘தகுதியற்றோர்’ எனக் கருதுவது சட்டவிரோதமானது எனவும், வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கும் தனி நடைமுறை இருந்தும் அதை பின்பற்றவில்லை எனவும் தேர்தல் நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

2. குடியுரிமை சான்றுகளுக்கு பெற்றோரின் சான்றுகளை கோருவது, அசாமில் நடந்த (NRC) தேசிய குடியுரிமை சட்டம் போன்ற தாக்கங்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

3. கிராமப்புறங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவையான ஆவணங்களை உடனே வழங்க இயலாது. இன்றைய திடீர் அறிவிப்பு மற்றும் குறுகிய கால அவகாசத்தில் (2 மாதங்கள்) பெரும்பாலானோருக்கு ஆவணங்கள் தயார் செய்ய முடியாத நிலையை உருவாக்குகிறது.

4. தேர்தல் ஆணையம் (EC) வழங்கிய ஆவணப் பட்டியல் ‘உதாரணமாக’ உள்ளது என்றாலும், பிற ஆவணங்கள் ஏற்கப்படுமா என்பதில் தெளிவுப் படுத்தவில்லை.

5. தேர்தல் ஆணையம் (EC) கூறினாலும், ஆவணங்கள் மட்டுமே அதிகாரிகளுக்குத் தெரியும் என்று கூறியுள்ளது. இது வெளிப்படைத்தன்மையை புறக்கணிப்பதாகவே கருதப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். தற்போது பீகார் ஒரு ஆரம்ப கட்டம் மட்டுமே; இலக்கு மேற்கு வங்கமே என்றார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரான ஆபத்தான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

ஆனால் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறும்போது, இது தவறான பயமே; சரியான ஆவணங்களுடன் சரிபார்ப்பு நடக்கும்போது குடியுரிமை உறுதி செய்வது தேவை என்கிறார்.

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறுவதாவது:

வாக்காளர்களிடமிருந்து தேவையற்ற தகவல்களை கேட்பது, அவர்களை விலக்கி வைக்கும் அபாயத்தை உருவாக்கும். மேலும் இதுபோன்ற சான்றுகள் கோருவது எதற்காக என்பது தெளிவாக இல்லை.

இந்த வாக்காளர் திருத்த நடவடிக்கை, ஒருபுறம் சட்டப்படி வாக்காளர் பட்டியல் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டாலும், அதனால் ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார அடிப்படையிலான பிரச்சனைகள் அச்சத்தை எழுப்புகின்றன. இந்த திருத்த நடவடிக்கை எப்படி நடைபெறுகிறது மற்றும் இதனால் ஏற்படப்போகு விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையே காலமே தீர்மானிக்கும் என்று கூறுகின்றனர்.

ஸ்டாலினோட  பெரிய அரசியல் மூவ்! என்.டி.ஏ பலவீனப்பட போகுது! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

MUST READ