spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை"விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்"

“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”

-

- Advertisement -

பொள்ளாச்சி மா. உமாபதி
மாநிலச் செயலாளர்,
திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை.

"விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்"மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!” “திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!” “நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்” என்பன போன்ற குரல்கள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இவர்கள் அத்தனை பேரும் இமயமலை மீது கல் எரிந்து சாய்க்க ஆசைப்படுபவர்கள். வெட்டுக்கிளிகள் ஒன்று கூடி விமானத்தை வீழ்த்த நினைப்பது போல் தவளைகள் படை எடுத்து களற்று மத யானையை கவிழ்த்து விட துடிப்பது போல், திமுகழகமென்னும் ஆயிரம் விழுதுகள் கொண்ட ஆலமரத்தை நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் வீழ்த்தத் துடிக்கின்றன.

we-r-hiring

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பெரும் சமத்துவ சித்தாந்தத்தை ஏற்று வாழ்ந்த தமிழரிடையே கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் சாஸ்திரங்களின் பெயரால் வர்ண பேதத்தை நிலைநிறுத்தி உழைக்கும், தமிழர்களை சூத்திரர்கள் ஆக்கி, அவர்களுக்கெல்லாம் கல்வி மறுத்த காரணத்தால் ஆரிய பார்ப்பனர்களின் அடிமைகளாக்கினர். அந்த அடிமைத் தளையை அகற்றி, “மண்ணில் நீயும் ஒரு மனிதன்; மரம் அன்று!” என்று உணர்த்தி அவர்களுக்கு கல்விக்கூடங்களின் கதவைத் திறந்து வைத்தது நீதிக் கட்சி என்னும் திராவிட இயக்கம். நூறாண்டுகள் நிறைந்த இயக்கம் திராவிட இயக்கம்.

பிறப்பால் மனிதர்களில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதிய மனப்பான்மைகளை ஒழித்து, சமத்துவ சமுதாயம் காண பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது திராவிட இயக்கம்."விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்"வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபோது சமூகத்தில், அரசியலில், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருந்த தமிழ்நாட்டை இன்று இந்தியாவிலேயே அரசியலில், பொருளாதாரத்தில், சமூகத்தில் முன்னிலையில் இருக்கச் செய்தது திராவிட இயக்கத்தின் நீட்சியாம் திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த உயர்வுகளுக்கெல்லாம் காரணம் தென்னாட்டு அம்பேத்கர் தந்தை பெரியாரும், வடநாட்டுப் பெரியார் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் காட்டிய பாதையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோர் வழிநடத்திச் செல்வதே ஆகும். இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஒரு பட்டியலினத்தவரை உயர் நீதி மன்ற நீதிபதி ஆக்கி, அண்ணல் அம்பேதகரின் கனவை நனவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்திலேயே ஒரு பல்கலைக்கழகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரை வைக்க முடியாத நிலை இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு கல்லூரிக்கு மட்டுமல்ல, சட்டப்பல்கலைக் கழகத்துக்கே அம்பேத்கர் பெயரைச் சூட்டியது திமு கழக ஆட்சி. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஒன்றுக்கு அம்பேத்கர் போக்குவரத்துக் கழகம் என்று பெயர் சூட்டியதும் அதே ஆட்சி தான்.

பட்டியல் இனத்தவர் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் சேரிப் பகுதிகளில்தான் வசிக்க வேண்டும் என்றிருந்த நிலையைத் தகர்த்து, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கி அவற்றில் அய்யர் முதல் அருந்ததியர் வரை அனைத்து வகுப்பினரும் அடுத்தடுத்த வீடுகளில் இணைந்து வாழும் நிலையை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி."விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்"பட்டியல் இனத்தவர் கோவிலுக்குள் நுழையக் கூடாது; தூரத்தில் இருந்து கோபுரத்தைத் தரிசித்து விட்டுத் திரும்ப வேண்டும்; “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்றிருந்த நிலையை மாற்றி, ஒவ்வொரு கோவில் அறங்காவலர் குழுவிலும் கட்டாயம் ஒரு பட்டியல் இனத்தவர் இடம்பெற வேண்டும் என்ற உயர் நிலையை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

ஆண்டுக்கு ஒரு முறை கோவில்களில் பட்டியல் இனத்து மக்களோடு அமா்ந்து சாப்பிடுவதை “சமபந்தி போஜனம்” என்று பெருமையாகக் கூறிக் கொண்டிருந்த காலத்தில், பட்டியல் இனத்துப் பெண்ணை தன் மகன் அழகிரிக்கு மனைவியாக்கி சம்பந்தி விருந்து அளித்து மகிழ்ந்தவர் திமு கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரையில் அனைத்து நிலைகளிலும் துணைச் செயலாளர்களில் ஒருவர் பட்டியல் இனத்தவராக இருக்க வேண்டும் என்ற கொள்கையை வகுத்து செயல்படுத்தி வருவது திராவிட முன்னேற்றக் கழகம். அது மட்டுமல்ல; பட்டியல் இனப் பிரிவில் துணைப் பொதுச் செயலாளராக அந்தியூர் செல்வராசு அவர்கள் இடம்பெற்று இருந்தாலும், பொதுப் பிரிவில் ஆராசா அவர்களை துணைப் பொதுச் செயலாளர் ஆக்கி இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்.

அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக இருந்த அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கி அவர்களில் பல்லாயிரம் பேரின் வாழ்வில் ஒளி ஏற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்றிய அரசின் கேபினட் தகுதி பெற்ற தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆராசா அவர்களை நியமித்ததும் திமு கழகம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் வி.பி. துரைசாமி அவர்களையும் பரிதி இளம்வழுதி அவர்களையும் துணைத் தலைவர்கள் ஆக்கியதும் திமு கழகம் தான்.

பட்டியல் இனத்தவர்களுக்கு அமைச்சரவையில், ஆதிதிராவிடர் நலத்துறை தானா? என்று கேட்போர் வாயடைக்க பால்வளத்துறை, சமூக நலத்துறை, மனித வளத்துறை மட்டுமல்ல உயர் கல்வித்துறை அமைச்சராகவும் ஆக்கி மகிழ்வது திராவிட மாடல் அரசு.

அனைத்து பட்டியல் இனத்தவரையும்,
அன்போடு “தம்பி” என்று அழைத்தவர் அறிஞர் அண்ணா. அவர்களை அன்பு “உடன்பிறப்பே” என்று அழைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.  பட்டியல் இனத்தவரை வேறு ஒருவராகக் கருதாமல் தங்கள் குடும்ப உறுப்பினராகக் கொண்டாடுவது திராவிட முன்னேற்றக் கழகம். கழக மாநாடுகளில் காலம் காலமாக அண்ணல் அம்பேத்கர் படம் திறந்து வைக்கப்பட்டு, அவரது அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி வருவது திராவிட முன்னேற்றக் கழகம்."விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்"

ஆனால், அரசியலில் அரிச்சுவடி கூட அறியாத சில அர்ஜுனன்கள் அம்பேத்கரை நாங்கள் தான் அறிமுகம் செய்யப் போகிறோம் என்று கூறுவது அறியாமையின் சிகரம், தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுவதாகவும் அதனை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகவும் அந்த அரைவேக்காடு கூறுகிறது.

ஒரு கட்சியில் யாருக்கு என்ன பொறுப்பு கொடுப்பது என்பது அந்தக் கட்சியில் உள்ளவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அதில் இளைஞர் அணிச் செயலாளராக இளவல் உதயநிதியை ஆக்கியது பற்றி கேட்பதற்கு கழகத்திற்குத் தொடர்பு இல்லாதவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

அதுபோலவே ஒரு தொகுதியில் சுட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, தன்னை எதிர்த்து நின்ற அனைவரது கட்டுத்தொகைகளையும் இழக்கச் செய்து தொகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று வெற்றி பெற்ற இளவல் உதயநிதி அவர்களை மன்னர் வாரிசு என்று கூறுவது மடமையின் உச்சம்."விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்"நூறாண்டு கண்ட ஒரு பேரியக்கத்தை ஓராண்டு கூட உருப்படியாக ஒரு கட்சியில் இல்லாத ஓர் அரைவேக்காடு பேசுவதை எல்லாம் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் புறங்கையால் தள்ளிவிட்டு பீடு நடை போடுவோம்.

கோவில் பணத்தில் கல்லூரி! முழு சங்கியாக மாறிய எடப்பாடி! கொதித்தெழுந்த ராஜகம்பீரன்!

MUST READ