spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்122 - கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

122 – கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

122. கனவுநிலை உரைத்தல் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்
          கியாதுசெய் வேன்கொல் விருந்து

கலைஞர் குறல் விளக்கம்வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?

we-r-hiring

1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
          குயலுண்மை சாற்றுவேன் மன்

கலைஞர் குறல் விளக்கம்நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.

1213. நனவினான் நல்கா தவரைக் கனவினால்
          காண்டலின் உண்டென் உயிர்

கலைஞர் குறல் விளக்கம்நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

1214. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
          நல்காரை நாடித் தரற்கு

கலைஞர் குறல் விளக்கம்நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

1215. நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
          கண்ட பொழுதே இனிது

கலைஞர் குறல் விளக்கம்காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!

1216. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
          காதலர் நீங்கிலர் மன்

கலைஞர் குறல் விளக்கம்நனவு மட்டும் திடீரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.

1217. நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
          என்னெம்மைப் பீழிப் பது

கலைஞர் குறல் விளக்கம்நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
          நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

கலைஞர் குறல் விளக்கம்தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர். விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.

1219. நனவினான் நல்காரை நோவர் கனவினான்
          காதலர்க் காணா தவர்

கலைஞர் குறல் விளக்கம்கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.

1220. நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
          காணார்கொல் இவ்வூ ரவர்

கலைஞர் குறல் விளக்கம்என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே. இந்த ஊரார், பிரிந்து சென்ற நமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?

MUST READ