spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி

சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி

-

- Advertisement -

ஆர்.ராமச்சந்திரன்

முன்னுரை:

சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு வெளிச்சக் கதிராகத் தோன்றியுள்ளது.சமூகநீதி ஒரு மாபெரும் புரட்சி

பண்டைய கால சமூக அமைப்பு

பண்டைய சமூக அமைப்புகளில் மன்னர்கள், நிலப்பிரபுக்கள், மதத்தலைவர்கள் ஆகியோர் அதிகாரம், செல்வம், அறிவு ஆகிய அனைத்தையும் கையாண்டனர். அதேவேளை, உழைப்பவர்கள், பெண்கள்,ஏழைகள், அடிமைகள் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்க்கை வறுமை மற்றும் அடக்கு முறைகளால் கட்டுப்பட்டிருந்தது. “உடலை கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன் இவ்வுலகு உழைப்பவர்க்குரியது” எனப் பாவலர்கள் பாடிய வரிகள், உழைப்பின் மீது அதிகாரம் செலுத்திய சமூகத்தின் வன்மையை வெளிப்படுத்துகின்றன.

we-r-hiring

மக்களாட்சியின் தோற்றமும் சமூக மாற்றங்களும்

சமூகநீதி ஒரு மாபெரும் புரட்சி18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மக்கள் விழிப்புணர்வுடன் எழுந்து, மன்னர் ஆட்சிகளை ஒதுக்கி மக்களாட்சியை நிறுவத் தொடங்கினர். பெண்களின் வாக்குரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் உலக அளவில் 1900க்கு பின்னரே முழுமையாக நடைமுறைக்கு வந்தன. ஏங்கல்ஸ், மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிய சமத்துவப் பொருளாதாரக் கொள்கைகள், உலக சமூக அமைப்பை இயக்கின.

இந்தியச் சூழ்நிலை

இந்தியாவில் சமத்துவமே இல்லாத அமைப்பாக சாதி முறை உருவானது. சாதி முறை மனிதர்களைப் பாழாக்கிய முக்கிய காரணியாக இருந்தது. மேக்ஸ் முல்லர் கூறியபடி, சாதி அறிவுக்கும் சுதந்திரத்துக்கும் எதிரானது. அது மகிழ்ச்சி, முன்னேற்றம், நாகரிக வளர்ச்சிக்கு எதிரான ஒரு கொடிய அமைப்பாக இருந்தது. இந்துமத நூல்களில் சாதி முறையே ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். மனுநீதி, ராமாயணம், மகாபாரதம், உபநிடதங்கள், வேதங்கள் ஆகியவை சாதியை மதத்தின் ஒரு பகுதியாகப் படைத்தன. இதனால் சமுதாயம் மதத்தின் பெயரில் பிளவுபட்டு, மக்கள் சிந்தனையற்ற அடிமைகளாக மாறிவிட்டனர்.

மதங்களின் பங்கு

இஸ்லாம். கிறிஸ்தவம், இந்துமதம், புத்த மதம், ஜைன மதம், தாவோயிசம் என பல மதங்கள் வளர்ந்தும், அதில் பலப் பாசிசக் கட்டுப்பாடுகளை உருவாக்கின. மதங்கள் அறிவியலை எதிர்த்து மூடநம்பிக்கையை வளர்த்தன. சதுர்முக கோட்பாடுகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் மூலம் சமநீதிக்கு எதிரான அமைப்புகள் வலுப்பெற்றன.

R.S.S மற்றும் சமூகப் பாசிசம்சமூகநீதி ஒரு மாபெரும் புரட்சி

ஜெர்மானிய மார்க்ஸிய அறிஞர் வால்டர் பெஞ்சமின் கூறியபடி, பாசிச அமைப்புகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடுகின்றன. இந்தியாவில் R.S.S என்பது ஐரோப்பிய பாசிச அமைப்புகளின் நவீன வடிவமாகப் பார்க்கப்படுகிறது. 1925இல் ஹெட்கேவார் தொடங்கிய இந்த அமைப்பு, இன்று ஹிந்துத் துவ அரசியலை உருவாக்கி, சமூகநீதியை ஒடுக்குகிறது.

திராவிட இயக்கமும் சமூகநீதிப் போராட்டமும்

இந்த வரலாற்றுப் பின்னணியில், திராவிட இயக்கம் சமூகநீதி மற்றும் சமத்துவம் நோக்கி முன்னேறி வருகிறது. புத்தர் முதல், புலே தம்பதியர், ராஜாராம் மோகன்ராய், நாராயண குரு, பெருந்தகை பெரியார் வரை சமூக மாற்றங்களை ஏற்படுத்தினர். எப்படியாவது சமூகநீதியை ஒழித்துச் சனாதனத்தை நடை முறைப்படுத்த ஒரு கூட்டம் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது.

இன்றைய சமூகநீதிக்கான போராட்டம்

இன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின், சமூகநீதிக்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். “தமிழ்ப்புதல்வன்”,”மக்களைத் தேடி மருத்துவம்” , “காலை உணவுத் திட்டம்”, “பெண்கள் முன்னேற்றம்”, “SC/ST மேம்பாட்டுத் திட்டங்கள்” சமூகநீதி விடுதிகள் ஆகியவை அவரது சமூகநீதி அணுகு முறையின் சான்றுகள். இவர், பெரியார், நாராயண குரு, அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக திறம்பட செயலாற்றி வருகிறார்!

சமூகநீதியின் முக்கியமான அம்சமாக இடஒதுக்கீடு (Reservation) விளங்குகிறது.சமூகநீதி ஒரு மாபெரும் புரட்சி

இந்நிலையில், சமீபத்தில் இந்தியா முழுவதும் சமூகநீதிக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. கவாய் அவர்கள் எடுத்த தீர்மானம் குறிப்பிடத்தக்கது.

அவர் உச்ச நீதிமன்றத்தின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துப் பணிச்சூழல்களிலும் இடஒதுக்கீட்டை கட்டாயமாகப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளார். இது தேசிய அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகப் பின்தள்ளப்பட்டவர்களுக்கு சட்டபூர்வமாக இருந்த இடஒதுக்கீடு நடைமுறையில் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைச் சமமாக்கும் முயற்சியாக, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டாயத்தையும் உறுதியையும் அந்த உத்தரவு ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை பெயரளவிலே உறங்கிக் கொண்டிருந்த இடஒதுக்கீடு என்ற சமூகநீதி, விழித்து எழும் தருணமாக இந்தத் தீர்மானம் பார்க்கப்படுகிறது. இது, இந்திய நீதிமன்றங்கள் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகளும் பின்பற்ற வேண்டிய ஒப்புமையாகும்.

முடிவுரை:

சமூகநீதி - ஒரு மாபெரும் புரட்சி

சமத்துவம் இல்லையெனில் சுதந்திரம் போய்விடும். சமூகநீதி இல்லையெனில் ஜனநாயகம் ஒரு போலியானது என்றார் தந்தை பெரியார். இன்றைக்கு சமூகநீதி என்பது வெறும் கொள்கையல்ல; அது ஒரு வாழ்க்கை முறையாகவும், அரசியல் இலக்காகவும் மாறியுள்ளது. சாதி, மதம், செல்வ வித்தியாசம் போன்றவற்றால் பிளவுபட்ட இந்தச் சமுதாயத்தை, சமத்துவம் மற்றும் உண்மையான சமூகநீதியால் ஒன்றிணைக்க முடியும். இன்று சமூகநீதி மலரட்டும். அது மட்டுமே நம் நாடு முழுவதும்  மக்களிடையே நம்பிக்கையைஉருவாக்கும்.
வாழ்க சமூகநீதி! வாழ்க மனிதநேயம்!

கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் – துணை முதல்வர் தலைமை

MUST READ