spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

-

- Advertisement -

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 27 வயதான இளைஞர் கவின் செல்வகணேஷ் திருநெல்வேலியில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படுகொலையை சிபிஐ (எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கவின் செல்வ கணேஷ் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தவர். இவரும் தற்போது சித்த மருத்துவராக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுபாஷினி என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இதற்கு சுபாஷினியின் பெற்றோர்கள் ஒப்புதல் தராமல் தூத்துக்குடி வீட்டை காலி செய்துவிட்டு திருநெல்வேலிக்கு குடி பெயர்ந்ததாகவும் தகவல்கள் உள்ளன. சுபாஷினியின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி இருவரும் முறையே ராஜபாளையம், மணிமுத்தாறு பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

we-r-hiring

கவின் செல்வகணேஷின் தாத்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுபாஷினியிடம் கலந்தாலோசிக்க அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு கவின் செல்வகணேஷ், அவரது தாயார், தம்பி, மாமா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சுபாஷினியின் சகோதரனான சுஜித், தனது பெற்றோர் பேசுவதற்கு அழைத்ததாக கூறி கவின் செல்வகணேசை வீட்டு வாசலில் அரிவாளால் சராமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். காவல்துறையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுஜித் மற்றும் அவரது தந்தை-தாய் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்திருந்தாலும் சுஜித்தை மட்டுமே கைது செய்துள்ளனர். கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய சாதி ஆணவக் கொலைகள் நிகழ்வதும், குறிப்பாக தென்மாவட்டங்களில் வன்படுகொலைகள் அதிகரித்து வருவதும் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வாகும்.  ஏற்கெனவே இருக்கிற கிரிமினல் சட்டங்களே போதுமானது என்கிற அரசின் வாதத்தை தொடர்ந்து நடந்தேறும் சாதி ஆணவக் கொலைகள் புதிய சட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்றன.

எனவே, தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் உடனடியாக சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும், படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தலைவா் பெ. சண்முகம் வலியுறுத்தி கூறியுள்ளாா்.

செயற்கை நுண்ணறிவு தளத்தில், கேள்வி கேட்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் – அன்பில் மகேஸ்

MUST READ