spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் - நீதிமன்றம்

ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் – நீதிமன்றம்

-

- Advertisement -

வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் - நீதிமன்றம்வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இரு தரப்பும் பொருளாதாரத்தில் சம அளவில் இருப்பதால் தங்களுக்கு வரதட்சணை தேவையில்லை  எனவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும் மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்ககூடும் எனவும் மனோதத்துவ ரீதியாக கவின் பாதிக்கப்பட்டு உள்ளார் எனவும் ரிதன்யா தந்தை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது

we-r-hiring

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படவில்லையே? , பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்கள் முழுமையாக இல்லை  எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரிதன்யாவின் போனிலிருந்து தான் அந்த ஆடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டது என  காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பிலும் வழக்கு முன் வைக்கப்பட்டதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை இல்லை… அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!

MUST READ