spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு... மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு… மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்!

-

- Advertisement -

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம்

we-r-hiring

அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க, பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இன்று காலை சென்னை அடையாறில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கு வந்து வரவேற்றார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார். முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் உடல் நலம் குறித்து விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அரசியல் நிமித்தமாக எந்தவித பேச்சுசாரத்தையும் நடத்தவில்லை என்றும் தெரிவித்தார். திமுக.வுடன் கூட்டணி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், அரசியலில் நண்பர்களும் இல்லை; எதிர்களும் இல்லை என்ற நிலை தான் வரலாறு என்றும், எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த சந்திப்பு கூட்டணிக்கான அஸ்வதிவாரமா? என்பது ஊடகங்களின் யூகம் என்று குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், அனைத்து கட்சிகளும், பல்வேறு கூட்டணி வைத்துள்ளது. வென்றுள்ளது. தோல்வி பெற்றுள்ளது என்று கூறினார். பாஜக அவமதிப்பு செய்துவிட்டதா? என்கிற கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம், தனக்கென சுய மரியாதை உள்ளதாகவும், தான் ஜெயலலிதாவிடம் 25 ஆண்டு காலம் நேரடி பார்வையில் பணியாற்றியிருக்கிறேன். கட்சி ரீதியாக அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் கூறினார். பா.ஜ.க.,வில் இருந்து வெளி வந்தது குறித்து இன்றைய கால சூழலில் தனக்கு ஒரு வருத்தம் உள்ளதாகவும், பாராளுமன்றத்தில் மக்களவையில் சமகிரக சிக்ஷா குறித்து ஒரு கேள்வி எழுப்பியபோது மும்மொழிக் கொள்கை தமிழக அரசு ஏற்கவில்லை. அதனால் தான் நாங்கள் நிதியை நிறுத்தி வைத்துள்ளோம் என்று சொல்லுகின்ற ஒரு சூழலை இன்றைக்கு இருக்கக்கூடிய கல்வி அமைச்சருக்கு இருக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

நாளை தவேகவின் முதல் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகளுடன் தலைவர் உரை

விஜயுடன் கூட்டணி வைப்பது குறித்து அவர்களும் எங்களோடு பேசவில்லை, நானும் அவர்களுடன் பேசவில்லை என தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் என்.டி.ஏ கூட்டணி அமைத்தார் பிரதமர். அப்போது எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் அமர்ந்திருந்தார். ஆனால், ஒரே வாரத்தில் போய்விட்டார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தேர்தலில் தனித்தனியாக நின்றார்கள் என்றும், தற்போது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்தார்.

MUST READ