அம்பத்தூரில் மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்த 3 சவரன் நகை, இன்சூரன்ஸ் பணம் மாற்று துணி என அனைத்தும் தீக்கிரையான சோகம் நடந்தேறியுள்ளது.அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மல்லிகா. இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவா்களுடன் மூதாட்டியும் வசித்து வருகிறார். கணவனை இழந்த மல்லிகா சிறு சிறு வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மேலும் அருகில் உள்ள சிவன் கோவில் வாசலில் பூ கட்டி விற்கும் தொழில் செய்து மன நலம் பாதிக்கப்பட்ட மகனையும்,மகள் மற்றும் மாமியாரை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாலை வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அருகில் கோவிலுக்கு குடும்பமாக சென்றுள்ளனர். யாரும் இல்லாத வீட்டில் தீ பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர் கூறவே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றுள்ளார். அப்பொழுது திடீரென வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது. இதில் நிலை குலைந்த மல்லிகா மற்றும் அவரது மகன் ஆகியோர் தீ காயம் அடைந்தனர். இதில் மல்லிகாவிற்கு முகம் கை மார்பு காலில் தீ காயம் அடைந்து தோல் எரிந்து காயம் ஏற்பட்டது. இது குறித்து தீ காயம் அடைந்த மல்லிகா கண்ணீர் மல்க பேட்டி அளிக்கையில்,தனது சொந்த தாய் மாமனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அதிலும் வீட்டை காப்பாற்ற வேண்டிய மூத்த மகன் மன நலம் பாதிக்கப்பட்டு எந்த பயனும் இல்லாமல் இருந்து வருகிறார். ஒரு மகள் அவரையும் கல்வி கற்க கூட முடியாமல் குடும்ப சூழல் உள்ளது. இவர்களுடன் வயது முதிர்ந்த மாமியாரை வைத்து வேதனை அடைந்து வருகின்றேன். இவர்களை வாழவைக்க வீட்டு வேலை, கோவில் வாசலில் பூ விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.

கோவிலுக்கு சாமி கும்பிட போன நேரத்தில் வீடு தீ பற்றி எரிந்தது கேள்விபட்டு சென்ற போது தீ வீடு முழுவதும் பரவி இருந்தது. தீய அணைக்க அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முயன்ற வேளையில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 3 சவரன் நகை, இன்சூரன்ஸ் பணம், உடைகள், வீடு பத்திரம் என அனைத்தையும் இழந்து விட்டு நடு தெருவில் இருக்கிறோம். எங்களுக்கு என ஆதரவாக யாரும் இல்லை எங்களை பார்த்துக்க கூட யாருமே இல்லை என கண்ணீர் மல்க பேசியது காண்போரை கலங்க செய்தது.
மேலும் தீ காயங்களால் அவர் அவதி அடைந்தது நெஞ்சை உலுக்கியது. தமிழக முதல்வர் எங்கள் மீது கருணை வைத்து உதவி செய்ய வேண்டும், வீடு கட்டி தர உத்தரவிட வேண்டும் எங்களுக்கு வாழ்க்கை தர வேண்டும் என கண்ணீர் மல்க தீ காயத்துடன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!