அரசியல் பார்க்காமல் ஒன்றிய அரசு கல்வி நநியை உடனே விடுவிக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்து பள்ளிக்கல்வி திட்டத்திற்கு உண்டான நிதியை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்காததை கண்டித்து கடந்த 29ஆம் தேதி முதல் உண்ணா நிலை அறப்போராட்டத்தை தொடங்கி உள்ளார். இன்றுடன் நான்காவது நாள். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
மேலும், தமிழக மாணவர்களுக்காக அவர் முன்னெடுத்துள்ள இந்த அறப்போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ, மற்றும் முதன்மை செயலாளரான துரை வைகோ தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். நாட்டில் உள்ள அனைவருக்கும் தரமான சமமான கல்வியை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை.

கட்டாய கல்வித் திட்டம் ஏழை வீட்டு பிள்ளைகளின் மாணவர்களுக்கு அனைவரும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 2152 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கோரிக்கை வைத்தார் நானும் சென்றிருந்தேன்.
மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படக்கூடிய பள்ளியை ஏற்க வேண்டும் அப்படி ஏற்றால்தான் சமக்கிர சிக்க்ஷா மூலம் வழங்கப்படும் நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டு மாணவர்கள் அவர்களின் எதிர்காலம், கல்வி பாதிக்க கூடாது என்ற உன்னதமான நோக்கத்தோடு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். 40 லட்சம் தமிழகம் மாணவர்கள் சார்பாக உண்ணாவிரதம் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சார்பாக அந்த கல்வி நிதியை உடனடியாக காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு ஏற்கனவே இதய பிரச்சினை இருக்கிறது ரத்த கொதிப்பு உள்ளது. அரசியல் பார்க்காமல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சி பார்க்காமல் அனைத்து கட்சிகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளாா்.
உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் – சசிகாந் செந்திலிடம் முத்தரசன் வேண்டுகோள்